;
Athirady Tamil News

பாடசாலை அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்: கல்வி அமைச்சு எடுக்கவுள்ள தீர்மானம்

0

பாடசாலை அதிபர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தாம் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (10) எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பாடசாலை அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது.

திறைசேரியின் உதவி
ஆசிரியர் தரத்தில் இருக்கும் ஒருவர் அதிபர் தரத்திற்கு தகுதியின் அடிப்படையில் மாற்றப்படும் போது அவர்களின் அடிப்படை கொடுப்பனவு குறைவடைகின்றது.

இது காலம் காலமாக இருந்து வரும் பிரச்சினையாகும். இந்த விடயம் தொடர்பாக நான் அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளேன்.

இதனூடாக தொடர்பாடல் கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளை திறைசேரியின் உதவியுடன் பெற்றுக்கொடுப்பதற்கு நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.