;
Athirady Tamil News

ஒரே நாளில் 17 கொலை செய்த கொடூர குற்றவாளி மூளையை தானம் செய்ய ஒப்புதல்

0

அமெரிக்க மக்களை மொத்தமாக நடுங்கவைத்த பாடசாலை துப்பாக்கிச் சூடு குற்றவாளி ஒருவர் தமது மூளையை அறிவியல் ஆய்வுக்கு தானமாக அளிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது
இதுவரையான அமெரிக்க வரலாற்றிலேயே மிகக் கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவமாக பார்க்கப்படுகிறது பார்க்லேண்ட் பாடசாலையில் நடந்த தாக்குதல்.

2018 பிப்ரவரி மாதம் Nikolas Cruz என்ற மாணவர் AR-15 ரக துப்பாக்கியால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடத்திய தாக்குதலில் மொத்தம் 17 பேர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர சம்பவத்தில் மிக மோசமான நிலையில் உயிர் தப்பியவர் 21 வயதான Anthony Borges.

அவர் மீது 5 முறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. தற்போது அவர் தொடர்பிலேயே புதிய தீர்ப்பு ஒன்று வெளியாகியுள்ளது. போர்ஜஸின் சட்டத்தரணி தெரிவிக்கையில், விஞ்ஞானிகள் அவரது மூளையை ஆய்வு செய்தால், இந்த அரக்கன் உருவாக காரணம் என்ன என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, எதிர்காலத்தில் இதுபோன்ற அரக்கர்கள் உருவாகாமல் தடுக்கவும் இந்த ஆய்வுகள் நமக்கு உதவலாம் என்றார். மேலும், தற்போது எட்டப்பட்டுள்ள இந்த தீர்வானது முன்னோடியில்லாது என்றார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தீர்வின் அடிப்படையில் போர்ஜஸ் தாம் உருவாக்க நினைக்கும் திரைப்படம், புதினம் அல்லது வேறு வடிவில் Nikolas Cruz-ன் பெயரை வெளிப்படையாக பயன்படுத்தலாம்.

காயங்களுடன் உயிர் தப்பினார்
தற்போது ஆயுள் தனடனை அனுபவித்துவரும் போர்ஜஸ் தமது பெயரைப் பயன்படுத்தி ஆதாயம் தேட முடியாது. 2018 பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட அந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய 17 பேர்களில், போர்ஜஸ் என்பவரும் ஒருவர்.

சம்பவத்தின் போது 15 வயதேயான போர்ஜஸ் கொலையாளியை தமது வகுப்புக்குள் நுழைய விடாமல் வாசலை மறைத்து நின்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த Nikolas Cruz கண்மூடித்தனமாக 5 முறை சுட்டுள்ளான்.

கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட போர்ஜஸ் கால்களில் காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் 10க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதனிடையே, Nikolas Cruz ஆதாயமடையவிருந்த காப்பீடு தொகையான 430,000 டொலர் தொகையும் தற்போது போர்ஜஸ் பெற உள்ளார். முன்னர் ப்ரோவர்ட் கவுண்டி பப்ளிக் ஸ்கூல் மாவட்டமானது பாதிக்கப்பட்ட அனைவருக்குமாக 26 மில்லியன் டொலர் ஒதுக்கியது.

அதில் 1.25 மில்லியன் டொலர் போர்ஜஸ் கைப்பற்றியுள்ளார். மட்டுமின்றி, தாக்குதலை தடுக்கத் தவறியதாக குறிப்பிட்டு FBI அமைப்பில் இருந்தும் வெளியிடப்படாத தொகை ஒன்றை போர்ஜஸ் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.