பிரான்சின் இக்கட்டான நிலைக்கு காரணமே அவர் தான்: Marine Le Pen பரபரப்பு குற்றச்சாட்டு
பிரான்சில் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு காரணமே ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தான் என தீவிர வலதுசாரித் தலைவர் Marine Le Pen குற்றஞ்சாட்டியுள்ளார்.
கூட்டணி ஆட்சிக்குப் பழகாதவர்கள்
நடந்து முடிந்த நாடாளுமன்றத்திற்கானத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தீவிர இடதுசாரிகள் கூட்டணியும் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் கூட்டணியும் ஆட்சி அமைக்கும் பொருட்டு போராடி வருகிறது.
கூட்டணி ஆட்சி அமைந்தாலும் அது நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜேர்மனி, ஸ்பெயின் அல்லது இத்தாலி போன்று கூட்டணி ஆட்சிக்குப் பழகாதவர்கள் பிரான்ஸ் அரசியல்வாதிகள்.
மேலும் சிக்கலின் இன்னொரு வடிவமாக, கூட்டணி கட்சிகள் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. மேக்ரான் கூட்டணி அல்லது இடதுசாரிகள் அணி எவ்வாறேனும் ஆட்சிக்கு வரும் என்றால், வலுவான நிலையில் இருக்கும் தீவிர வலதுசாரிகளால் நம்பிக்கை வாக்கெடுப்பு முன்னெடுக்க கோரப்படும்.
கேள்விக்குறியாக உள்ளது
இந்த நிலையிலேயே நாட்டின் மொத்த நெருக்கடிக்கும் காரணம் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் என National Rally-ன் தலைவர் Marine Le Pen குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டின் பிரதமர் எந்த நிலையில் இருந்து வருவார் என்பதை யாராலும் அறிய முடியாத நிலையில் இன்று நாம் புதைகுழியில் சிக்கிக் கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ள Le Pen, நாட்டுக்காக என்ன கொள்கை பின்பற்றப்படும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது என்றார்.
மட்டுமின்றி, தங்களின் National Rally கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தவர்கள் என குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்த Le Pen, இப்படியான ஒப்பந்தங்கள் முறையா என்றும் கேள்வி எழுப்பினார்.