;
Athirady Tamil News

ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் வெடிவிபத்து: உயிரிழந்தவரின் அடையாளம் தெரிந்தது

0

ஜேர்மனியில், புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அது குறித்து சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் தீவிபத்து
ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்திலுள்ள Buchholz in der Nordheide என்னுமிடத்தில் புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்று உள்ளது.

அங்கு தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்ற பொலிசார், மைய அலுவலர்கள் இருவரை அழைத்துக்கொண்டு விசாரணைக்காக அந்த கட்டிடத்துக்குள் சென்றுள்ளனர்.

அப்போது, பெட்ரோல் வசானை வீசுவதை உணர்ந்த பொலிசார் கட்டிடத்தை விட்டு வெளியேறுவதற்குள் திடீரென ஏதோ பயங்கரமாக வெடித்துள்ளது.

இந்த வெடிவிபத்தில், அந்த பொலிசார், மைய அலுவலர்கள் உட்பட, 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

கண்டெடுக்கப்பட்ட உடல்
தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்க, கட்டிடத்துக்குள் ஒரு உயிரற்ற உடல் கிடப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

நேற்று, ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்த நிலையில், அது ஒரு 28 வயதுடைய ஆணின் உடல் என்றும், அவர் எத்தியோப்பியா நாட்டவர் என்றும் பொலிசார் தற்போது தெரிவித்துள்ளார்கள். என்றாலும் இதுவரை அந்த உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்படவில்லை.

அத்துடன், உயிரிழந்த அந்த நபர்தான் அந்த வெடிவிபத்துக்குக் காரணம் என்றும் பொலிசார் நம்புகிறார்கள். தீவிபத்தால் சுமார் 250,000 யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.