;
Athirady Tamil News

உக்ரைனுக்கு வந்து குவியப்போகும் ஆயுதங்கள்

0

உக்ரைனுக்கு(ukraine) இன்னும் ஆயுதங்களை வழங்குவோம் என்றும், போரில் ரஷ்யா வெற்றி பெறாது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(joe biden) தெரிவித்தார்.

அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேட்டோ(nato) அமைப்பின் 75-வது ஆண்டு விழாவையொட்டி அமெரிக்க தலைநகர் வோஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாடு நேற்று தொடங்கியது.இந்த மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டின் தொடக்க விழாவில் அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

உக்ரைனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள்
வரவிருக்கும் மாதங்களில் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்பட ஏராளமான ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளன.

நாங்கள் முக்கியமான வான் பாதுகாப்பு இடைமறிப்புகளை ஏற்றுமதி செய்யும் போது, போரில் உக்ரைன் முன்னோக்கி செல்வது உறுதி செய்யப்படும்.இந்த போரில் ரஷ்யா தோல்வி அடைந்து வருகிறது.

இழப்புகள் அதிர்ச்சி அளிக்கின்றன
2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் புடினின்(putin) விருப்ப போரில், அவரது இழப்புகள் அதிர்ச்சி அளிக்கின்றன. போரில் மூன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் பலியாகினர். ஏறக்குறைய 10 லட்சம் ரஷ்யர்கள், பெரும்பாலும் இளைஞர்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறி உள்ளனர், ஏனெனில் அவர்கள் ரஷ்யாவில் எதிர்காலத்தை காணவில்லை.

போர் தொடங்கியபோது 5 நாட்களில் உக்ரைன் வீழ்ந்துவிடும் என்று அவர் (புடின்) நினைத்தார். இரண்டரை ஆண்டுகள் கழித்து இன்னும் நிற்கிறது, தொடர்ந்து நிற்கும். இந்த போருக்கு முன், நேட்டோ உடைந்து விடும் என்று புடின் நினைத்தார் என்பது அனைத்து நட்பு நாடுகளுக்கும் தெரியும்.

போரில் ரஷ்யா வெற்றி பெறாது
இன்று, நேட்டோ அதன் வரலாற்றில் இருந்ததை விட பலமாக உள்ளது. இந்த அர்த்தமற்ற போர் தொடங்கிய போது, உக்ரைன் ஒரு சுதந்திர நாடாக இருந்தது. இன்றும் அது சுதந்திர நாடாகவே உள்ளது.

இந்த போரில் ரஷ்யா வெற்றி பெறாது. உக்ரைனே வெற்றி பெறும்.உலக பாதுகாப்பின் அரணாக நேட்டோ உள்ளது என்பதை நினைவில் நாம் கொள்வோம்” என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.