;
Athirady Tamil News

குழந்தையின் தலைக்குள் இருந்த அதன் இரட்டைக் குழந்தை: அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம்

0

குழந்தை ஒன்றின் தலை வேகமாக வளர்வதைக் கண்ட மருத்துவர்கள் அந்த குழந்தையை ஸ்கேன் செய்து பார்க்க, அவர்களுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம்
சீனாவில், ஒரு வயதுக் குழந்தை ஒன்றின் தலை வேகமாக வளர்வதைக் கவனித்த அதன் பெற்றோர் அந்தக் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

அம்மா என்று மட்டுமே அழைக்கத் தெரிந்த அந்தக் குழந்தையின் உடல் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறது. மருத்துவர்கள் அவளது தலையை ஸ்கேன் செய்து பார்க்க, அதிரவைக்கும் ஒரு விடயம் தெரியவந்தது.

ஆம், அந்த பெண் குழந்தையின் தலைக்குள் ஒரு கரு வளர்ந்துகொண்டிருந்திருக்கிறது. அதாவது, அவள் ஒரு இரட்டைக் குழந்தை. அவளுடன் வளர்ந்த குழந்தை, தாயின் கர்ப்பப்பைக்குள் வளர்வதற்கு பதிலாக, அந்த பெண் குழந்தையின் தலைக்குள் வளர்ந்திருக்கிறது.

அறுவை சிகிச்சை செய்து அவளது தலைக்குள்ளிருந்த குழந்தையை மருத்துவர்கள் அகற்ற, அவளது தலைக்குள்ளிருந்த அந்தக் குழந்தைக்கு முதுகெலும்பு, ஒரு கை, சில உள்ளுறுப்புகள் மற்றும் விரல்கள் உருவாகியிருந்ததைக் கண்டு வியப்பிலாழ்ந்துள்ளார்கள். காரணம், 500,000 குழந்தைகளில் ஒன்றுதான் இப்படி பிறக்குமாம்.

சோகம் என்னவென்றால், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 12ஆவது நாள், அந்த பெண் குழந்தையும் இறந்துவிட்டாள்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.