கெய்ர் ஸ்டார்மர் ஆட்சி காலத்தில் லட்சக்கணக்கான செல்வந்தர்களை இழக்கவிருக்கும் பிரித்தானியா!
இன்னும் நான்கு ஆண்டுகளில் பிரித்தானியா அதன் 17 சதவீத செல்வந்தர்களை (Millionaires) இழக்கும் என ஆய்வு ஒன்று கூறுகிறது.
உலகின் மிகப்பாரிய செல்வ மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான UBS ஸ்விஸ் வங்கியின் global wealth trends பகுப்பாய்வின்படி, 2028-ஆம் ஆண்டுக்குள் எந்த நாட்டிலும் இல்லாத அவ்விற்கு அதிக மில்லியனர்களை பிரித்தானியா இழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியற்றுள்ள கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) ஆட்சிக்காலத்தில் நிகழவுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை (ஜூலை 10) வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 2023-இல் 3.062 மில்லியனாக இருந்த பிரித்தானியாவின் மில்லியனர்களின் எண்ணிக்கை, 2028-இல் 2.542 மில்லியனாக 17 சதவீதம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நெதர்லாந்தும் 2028-ஆம் ஆண்டில் அதன் மில்லியனர்களில் 4 சதவீதத்தை இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு நாடுகளும் global wealth trends எனும் உலகளாவிய போக்கில் பின்னுக்கு செல்கின்றன.
அனால், இதே காலக்கட்டத்தில் 56 நாடுகளில், 52 நாடுகளில் மில்லியனர்களின் எண்ணிக்கை உயரும் என்று UBS தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில், தைவான் மில்லியனர்களில் மிகப்பாரிய வளர்ச்சியை அனுபவிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2023-ல் 789,000-ஆகி யிருந்த மில்லியனர் எண்ணிக்கை, 47 சதவீதம் அதிகரித்து 2028-ல் 1.158 மில்லியனாக அதிகரிக்குமென கூறப்படுகிறது.
தைவான் அதன் மைக்ரோசிப் துறையில் காணவுள்ள வளர்ச்சி மற்றும் பணக்கார வெளிநாட்டினரின் குடியேற்றத்தின் எதிர்பார்க்கப்படும் உயர்வு ஆகியவற்றால் இந்த முன்னேற்றத்தை அடியும் என கூறப்படுகிறது.