;
Athirady Tamil News

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

0

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கொலையாளிகள் 10 நாள்களாக நோட்டமிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங், தினந்தோறும் எங்கெங்கு செல்கிறார், எத்தனை மணிக்குச் செல்கிறார் என்பது உள்பட அனைத்தையும், அவரைக் கொலை செய்வதற்கு முன் 10 நாள்கள் நோட்டமிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

11 பேரையும் பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணை மூலம், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாள்கள் நோட்டமிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் கொலை செய்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே நிகழ்விடத்திற்கு வந்து கொலையாளிகள் காத்திருந்துள்ளனர் எனவும் போலி நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி 5 இருசக்கர வாகனத்தில் வந்து கொலை செய்ததும் அம்பலம் ஆகி உள்ளது.

அதே நேரம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரின் வங்கிப் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, ராமு என்கிற வினோத்தின் வங்கிக் கணக்குகளும் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அருள் என்பவரின் செல்போனில் உள்ள எண்களைக் கொண்டு விசாரணை நடத்தி, திருநின்றவூரைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.