என்னை கைது செய்து பாருங்கன்னு சவால் விட்ட சீமான்.., உடனே கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற புகார்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடியதாக கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவால் விட்ட சீமான்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூராக பாடியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் நேற்று காலை கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “கள்ளச்சாராயத்தை விற்றவர்களை எல்லாம் கைது செய்யாமல் மேடையில் பாடியதற்காக கைது செய்கிறீர்கள்.
எதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளீர்கள்? என்னை விடவா அவர் அதிகமாக பேசிவிட்டார். என்னை சுற்றியிருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள்.
முன்னாள் முதலமைச்சரை கருணாநிதியை பற்றி அவதூறாக பாடியதால் கைது செய்துள்ளார்கள். இருக்கிற பாட்டை பாடுவதில் என்ன தவறு இருக்கிறது.
எழுதியவர், பாடியவரை விட்டுவிட்டு மறுபடியும் எடுத்து பாடியவரை கைது செய்கிறீர்கள். நான் இப்போது பாடுகிறேன், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” என்று கூறியிருந்தார்.
சீமான் மீது புகார்
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாகவும், பாடல் பாடியதாகவும் சீமான் மீது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான நடராஜன் புகார் அளித்துள்ளார்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.