டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி முதல்வர் கைது
டெல்லி மதுபான கடைகளுக்கான உரிமம் வழங்கியது தொடர்பான வழக்கில் ரூ.2,800 கோடி வரை ஊழல் நடந்து இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் வரை 9 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததை தொடர்ந்து கடந்த மார்ச் 21ம் திகதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
மேலும் அவர் திகார் சிறையிலும் விசாரணைக்காக அடைக்கப்பட்டார்.
ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்
இதனை தொடர்ந்து டெல்லி மதுபான கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று(ஜூலை 12) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அதில், டெல்லி மதுபான கடைகளுக்கான உரிமம் வழங்கியது தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.