டயனா கமகேவிற்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு (Diana Gamage) எதிராக குற்ற விசாரணைப் பிரிவினர் ஏழு குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.
கொழும்பு (Colombo) பிரதான நீதவான் நீதிமன்றில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் போலி தகவல்களை வழங்கியமை, போலி ஆவணங்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை, குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமை உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுக்கள் இவ்வாறு சுமத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சந்தேக நபரின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை வெளிநாட்டு கடவுச்சீட்டுடைய டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது எனக் கூறி சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் டயனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருந்தது.