காவல்துறை மா அதிபர் வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை
காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon) அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவிக்கும் வகையில் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த சுற்று நிருபத்தில் காவல் விசாரணைகளின் போது தகவல்களை ஊடகங்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து காவல் உத்தியோகத்தர்களையும் அறிவுறுத்தும் வகையில் இந்த சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
விசேட சுற்றுநிருபம்
இதற்கு முன்னரும், விசாரணைகளின் போதான தகவல்களை ஊடகங்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் ஊடகங்களில் வெளியிடப்படுவது குறித்து கட்டுப்படுத்தும் வகையில் புதிய சுற்று நிருபம் நேற்று(12) வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில், அத்துருகிரிய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தும் காணொளி ஊடகங்களில் வெளியாகிருந்தது.
இந்த விவகாரமானது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இவ்வாறான ஓர் பின்னணியில் சந்தேக நபர்கள் பற்றிய விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவது குறித்து சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.