;
Athirady Tamil News

கருணைக்கொலை இயந்திரத்திற்கு தடை விதித்த சுவிட்சர்லாந்து

0

நொடிகளில் உயிரிழக்கச்செய்யும் கருணைக்கொலை இயந்திரத்தை சுவிட்சர்லாந்து(Switzerland) அரசு தடை விதித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள பிரபல நிறுவனம்,கருணைக்கொலையை (euthanasia) கோருவோருக்காக சர்கோபகஸ் (sarcophagus) என்ற இயந்திரத்தை தயாரித்துள்ளது.

இந்த இயந்திரத்தை டொக்டர். பிலிப் நிட்ச்கே (Dr Philip Nitschke) என்பவர் உருவாக்கியுள்ளார்.

கருணைக்கொலை
மேலும், இந்த இயந்திரம் விரைவில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த இயந்திரம், தீங்கு விளைவிக்கும் என்ற காரணத்தால் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது.

தாங்க முடியாத மருத்துவப் பிரச்சனையால் அவதிப்படுபவர் எளிதில் மரணம் அடைய இந்த இயந்திரம், பயனுள்ளதாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசு முடிவு
கருணைக்கொலை செய்துகொள்ள விரும்புபவர்கள் இந்த இயந்திரத்தில் அமரும் போது, “நீங்கள் யார்?, எங்கே இருக்கிறீர்கள்?, இந்த பொத்தானை அழுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? என மூன்று கேள்விகளை இயந்திரம் கேட்கும்.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்தால், இயந்திரம் அதன் வேலையைத் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பொத்தானை அழுத்திய 30 வினாடிகளில் ஒக்சிஜன் சதவீதம் 21ல் இருந்து 1 சதவீதம் வரை குறைந்து நொடிகளில் அந்த நபர் உயிரிழந்து விட்டார். எனினும்,கடுமையான விமர்சனங்கள் காரணமாக இந்த இயந்திரத்தை தடை செய்ய சுவிட்சர்லாந்து அரசு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.