பழைய துணிகளை விற்று லட்சங்களை ஈட்டிய பிரித்தானிய பெண்.. எப்படி தெரியுமா..?
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது பழைய துணிகளை விற்று பணக்காரர் ஆனார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த ஹன்னா பெவிங்டன் (Hannah Bevington) என்ற பெண் தனது ஆடைகளை பழைய பொருட்களை விற்கும் ஓன்லைன் தளமான வின்டெட்டில் (Vinted) விற்பனைக்கு வைத்துள்ளார்.
அவற்றுடன், தனது பழைய காலணிகளையும், பழைய நகைகளையும் விற்பனைக்கு வைத்துள்ளார். அவற்றை விற்றதன் மூலம் ரூ.6,44,331 ரொக்கமாக சம்பாதித்துள்ளார்.
பழைய பொருட்களை வைத்து அதிக பணம் சம்பாதிப்பது எப்படி என்பது குறித்த சில குறிப்புகளையும் பகிர்ந்துள்ளார்.
- நாம் வாங்கிய பழைய பொருளின் விலையை அதன் அசல் விலையை விடக் குறைக்கக் கூடாது.
- ஏனெனில் இந்த விலை குறைப்பு என்பது வாங்குபவர் அதை மலிவாகப் பார்க்கக்கூடும்.
- அதேபோல, ஒரே நேரத்தில் குறைந்தது 100 பொருட்களையாவது விற்பனைக்கு வைக்க வேண்டும்.
- அதாவது வார இறுதி நாட்களில் உங்கள் பொருட்கள் அதிகமாக விற்பனையாகும் வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.
- மேலும் நீங்கள் விற்கும் பொருட்களின் நேர்த்தியான புகைப்படங்களை எடுக்க வேண்டும்,
- நீங்கள் வழங்கும் சலுகை தெளிவாகத் தெரிய வேண்டும், மேலும் அசல் விலையை விட 10 முதல் 15 சதவீதம் குறைவாக சலுகையை அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.