;
Athirady Tamil News

இந்திய குடியுரிமை வேண்டாம்.., வெளிநாட்டில் குடியேறும் இந்தியர்கள்: இந்த மாநிலம் தான் அதிகம்

0

இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளிநாடுகளில் குடியேறுவதில் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குஜராத் மாநிலம்
கடந்த 2023 -ம் ஆண்டில், இந்திய மாநிலமான குஜராத்தை சேர்ந்த 241 பேர் தங்களுடைய இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று சொல்லி பாஸ்போர்ட்டை இந்திய அரசிடம் திருப்பி கொடுத்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை கடந்த 2022 -ம் ஆண்டை ஒப்பிடும் போது இரண்டு மடங்கு அதிகம் ஆகும். அதாவது, 2022-ம் ஆண்டில் 41 பேர் மட்டும் இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று கைவிட்டனர்.

நடப்பு ஆண்டு மே மாதம் வரையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 244 பேர் தங்கள் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர்.

அதன்படி கடந்த 2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் குஜராத் மாநிலத்தில் இருந்து மட்டும் 22,300 பேர் தங்கள் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர்.

அந்தவகையில் இந்த பட்டியலில் டெல்லி (60,414) முதல் இடத்திலும், பஞ்சாப் (28,117) இரண்டாம் இடத்திலும் உள்ளது.

இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று கைவிடுபவர்களில் பெரும்பாலானோர் 30 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் தான உள்ளனர்.

இவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தங்களுக்கான குடியுரிமையை பெறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.