;
Athirady Tamil News

ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் விபத்து

0

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் புத்தளம், கருவலகஸ்வெவ பிரதேசத்தில் வைத்து இன்று (13) விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துவிச்சக்கரவண்டியொன்று திடீரென வீதியில் பிரவேசித்தபோது, ரிஷாத் பதியுதீன் கார் சற்றே விலக முற்பட்டதால் வீதியை விட்டு விலகிச் சென்றதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியை விட்டு விலகி விபத்து
விபத்தின் போது காரில் ரிஷாத் பதியுதீனுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனினும் துவிச்சக்கரவண்டியில் சென்றவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

காயமடைந்தவர் புத்தளம் ஆரம்ப வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கார் சிறியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.