;
Athirady Tamil News

வடக்கு மக்களை புகழ்ந்து பேசிய மனுஷ நாணயக்கார

0

வடக்கில் (North) உள்ள மக்கள் அரச சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் (Kilinochchi) நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று நாடு பாரிய ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு வரும் நிலையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் சம்பள அதிகரிப்பு கோரி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாட்டின் பொருளாதார நிலை தெரியாது இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.

நேற்றைய சந்திப்பொன்றின் போது வடக்கில் இவ்விடயம் எவ்வாறு உள்ளது என அரசாங்க அதிபரிடம் வினவினேன்.

வடக்கில் ஓரளவு அவ்வாறான நிலை இல்லை. சில போராட்டங்கள் நடைபெறுகின்றது. அண்மையில் யாழ்ப்பாணம் (Jaffna), சாவகச்சேரியில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் அவர் எனக்கு தெரிவித்தார்.

உண்மையில் வடக்கில் உள்ள மக்கள் வித்தியாசமாக சிந்திக்கின்றார்கள். தமக்கு கிடைக்க வேண்டிய அரச சேவைகள் தொடர்பில் விழிப்புடன் நடந்து கொள்கின்றார்கள்.

தமக்கு கிடைக்க வேண்டிய சேவைகளை தகவல் அறியும் உரிமைச்சட்டம் (RTI)ஊடாக அறிந்து கொள்வதுடன், அந்த விடயம் தொடர்பில் மாற்று சிந்தனையுடன் செயற்படுகின்றார்கள்” என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.