;
Athirady Tamil News

வெளிநாடுகளில் குடியேறும் சுவிஸ் நாட்டவர்கள்: மேலும் மேலும் அதிகரிக்கும் எண்ணிக்கை

0

எப்படியாவது ஒரு முறையாவது சுவிட்சர்லாந்துக்குச் சென்றுவிடமாட்டோமா என பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கனவு கண்டுகொண்டிருக்க, வெளிநாடுகளில் குடியமரும் சுவிஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துவருவதாக சுவிஸ் அமைப்பொன்று தெரிவிக்கிறது.

வெளிநாடுகளில் குடியேறும் சுவிஸ் நாட்டவர்கள்
வெளிநாடுகளில் குடியேறும் சுவிஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துவருவதாக Organisation of the Swiss Abroad (OSA) என்னும் சுவிஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி, 813,400 சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்துவருகிறார் கள் என்கிறது OSA அமைப்பு. இது, முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, 1.7 சதவிகிதம் அதிகம் என்கிறார் OSA அமைப்பின் இயக்குநரான Ariane Rustichelli என்பவர்.

எந்த நாட்டுக்கு செல்கிறார்கள்?
இப்படி வெளிநாடுகளில் சென்று குடியேறும் சுவிஸ் நாட்டவர்களின் விருப்ப நாடாக உள்ளது, பிரான்ஸ்! வெளிநாடுகளில் வாழும் சுவிஸ் நாட்டவர்களில் கால்வாசிப்பேர் பிரான்சில் வாழ்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக, ஜேர்மனி, இத்தாலி, பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அவர்கள்.

ஆசியாவிலும்…
ஆசியா நாட்டவர்கள் பலருக்கும் சுவிஸ் வாழ்க்கை ஒரு கனவு. ஆனால், சுவிஸ் நாட்டவர்களில் சிலர் ஆசியாவிலும் சென்று குடியமர்ந்துள்ளார்கள். 292,700 பேர் பிற நாடுகளில் குடியமர்ந்துள்ள நிலையில், அவர்களில் 16 சதவிகிதம் பேர் வட அமெரிக்காவிலும், 7 சதவிகிதம் பேர் லத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும், 7 சதவிகிதம் பேர் ஆசியாவிலும், ஒரு சதவிகிதம் பேர் ஆப்பிரிக்காவிலும் சென்று குடியமர்ந்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், ஆப்பிரிக்கா தவிர்த்து, மற்ற நாடுகளில் குடியமரும் சுவிஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை, குறிப்பாக, ஆசியாவில் குடியமரும் சுவிஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. ஆசியாவில் குடியமரும் சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை 3.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.