டொனால்ட் டிரம்பின் கட்சிக்கு பெரும் நன்கொடை அளித்துள்ள எலோன் மஸ்க்
அமெரிக்க கோடீஸ்வரர் எலான் மஸ்க் (Elon Musk) டொனால்டு டிரம்ப் கட்சிக்கு அதிகளவில் நன்கொடை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் வரும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டிரம்ப் போட்டியிடுகிறார்.
டிரம்ப் சார்பில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் America PAC என்ற நிறுவனத்துக்கு மஸ்க் பெரும் நன்கொடை அளித்துள்ளதாக தெரிகிறது.
ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஜோ பைடனை மஸ்க் சமீபத்தில் விமர்சித்தது தெரிந்ததே.
டிரம்பிற்கு பணிபுரியும் அமெரிக்க பேக் நிறுவனத்திற்கு மஸ்க் எவ்வளவு கொடுத்துள்ளார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அந்த அமைப்பு இந்த மாதத்திலேயே நன்கொடையாளர்களின் பட்டியலை வெளியிடும் என் அதெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரம் பரிந்துரைக்கப்படுவார் எனத் தெரிகிறது. இந்நிலையில், சமீபத்தில் மஸ்க் மற்றும் பிற பணக்கார நன்கொடையாளர்களை டிரம்ப் சந்தித்துள்ளார்.
சுமார் 263 பில்லியன் டொலர் சொத்துக்களைக் கொண்ட மஸ்க், அரசியலில் இருந்து விலகி இருப்பதாக முதலில் அறிவித்தார். ஆனால் தேர்தல் திகதி நெருங்கி வரும் நிலையில் அவர் குடியரசு கட்சிக்கு ஆதரவாக மாறி வருவதாக தெரிகிறது.
அவர் எப்போதும் தனது சமூக ஊடக கணக்குகளில் ஜனநாயக கட்சிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
ஆனால், இது வரை மஸ்க் யாரை ஆதரிக்கிறார் என்று பகிரங்கமாக கூறவில்லை.