பாதுகாப்பான இடம்: மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் தாக்குதலை முன்னெடுத்த இஸ்ரேல்
காஸாவில் கான் யூனிஸ் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அதிகமாக தங்கியிருக்கும் இடத்தில் இஸ்ரேல் கடுமையானத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
பாதுகாப்பான இடம்
முதற்கட்ட தகவலில், 71 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது. குறித்த பகுதியானது பாதுகாப்பான இடம் என்றும், பாலஸ்தீன மக்கள் அப்பகுதிக்கு இடம்பெயர வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே கட்டாயப்படுத்திய நிலையில்,
தற்போது அப்பகுதியை இலக்கு வைத்து கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இந்த சம்பவத்தில் சுமார் 300 பேர் கயங்களுடன் தப்பியுள்ளனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஹமாஸின் மூத்த தலைவர் மொஹமத் டெய்ஃப் என்பவர் தாக்குதலுக்கு இலக்கானதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் குறித்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி
தாக்குதல் நடந்த பகுதியை நேரில் பார்வையிட்ட நபர் கூறுகையில், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி போல தாக்குதல் நடந்த பகுதி காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தம் என்பதை இஸ்ரேல் எதிர்பார்க்கவில்லை என்றும், பாதுகாப்பான பகுதி என்று மக்களை ஒரு பகுதியில் குவித்துவிட்டு, இனப்படுகொலை இஸ்ரேல் முன்னெடுப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.