டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு : ரணில் அதிர்ச்சி
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அதிர்ச்சி தெரிவித்துள்ளதுடன் அவர் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து நிம்மதியடைவதாக தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் டொனால்ட் ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்த போது மர்ம நபரால் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து, டொனால்ட் ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நலமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், இந்த சம்பவத்திற்கு ரணில் கருத்து தெரிவிக்கையில், அரசியலில் இலங்கையர்கள் இவ்வாறான வன்முறைகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
I am shocked by the assassination attempt on former President @realDonaldTrump and relieved he is safe. Wishing him a swift recovery. Sri Lankans know the pain of political violence all too well. We must all uphold the laws that protect democracy.
— Ranil Wickremesinghe (@RW_UNP) July 14, 2024