;
Athirady Tamil News

டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி: தாக்குதல்தாரியின் பின்னணி வெளியானது

0

பென்சில்வேனியா தேர்தல் பரப்புரை பேரணியில் டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி நடந்த நிலையில், தற்போது தாக்குதல்தாரியின் முழு பின்னணியும் வெளியாகியுள்ளது.

மிகக் கொடூரமான வன்முறை
அரசியல் வரலாற்றில் மிகக் கொடூரமான வன்முறைச் செயல்களில் ஒன்று என குறிப்பிடப்படும் இச்சம்பவத்தில், தாக்குதல்தாரி 20 வயது Thomas Matthew Crooks என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்டு ட்ரம்ப் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப் ஆயிரக்கணக்கான தமது ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென தமது காதை அவர் பொத்திக்கொண்டுள்ளார்.

ரத்தம் வழிந்து அவரது முகத்தில் பரவியது. ட்ரம்ப் பேசிக்கொண்டிருந்த மேடைக்கும் சுமார் 390 அடி தொலைவில் ஒரு கூரையிம் மீதிருந்து AR துப்பாக்கியை பயன்படுத்தி தாக்குதல்தாரி சுட்டுள்ளான்.

குறைந்தது எட்டு முறை துப்பாக்கி வெடித்த நிலையில் கூட்டம் அலறத் தொடங்கியது. துரிதமாக செயல்பட்ட உளவுத்துறை அதிகாரிகள் ட்ரம்பை சூழ்ந்துகொண்டு, மேடையில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர்.

20 வயது Thomas Matthew Crooks
இந்த நிலையில் தனது முஷ்டியை சுருட்டி மேலே உயர்த்தி, போராடு, போராடு என ட்ரம்ப் பலமுறை கத்தியுள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ட்ரம்ப், சில மணி நேரங்களுக்கு பின்னர், தாம் நலமாக இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

ட்ரம்புக்கு இலக்கு வைத்த அந்த தாக்குதாரி, உளவுத்துறை அதிகாரிகளால் கொல்லப்படும் முன்னர் பொதுமக்களில் ஒருவரை கொன்றதாகவும், இருவர் பலத்த காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பென்சில்வேனியாவின் Bethel Park பகுதியை சேர்ந்த 20 வயது Thomas Matthew Crooks என்பவரே தாக்குதல்தாரி என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஆனால் ட்ரம்ப் மீதான கொலை முயற்சி வழக்கை விசாரித்துவரும் FBI இதுவரை தாக்குதல்தாரியின் பெயர் உள்ளிட்ட தகவல்களை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.