தேர்தலில் வெற்றிபெற ட்ரம்ப் நாடகமா… அது போலியான ரத்தம்: சமூக ஊடகங்களில் பரவும் தகவல்
தனது தேர்தல் ஆதாயத்திற்காக டொனால்டு ட்ரம்ப் நடத்திய நாடகம் இதுவென, அவருக்கு எதிரான கருத்துடைய இணையப் பயனர்கள் சமூக ஊடகங்களில் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.
இது வெறும் நாடகம்
டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி நடந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ள நிலையில், இது வெறும் நாடகம் என சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
டிரம்ப் தமது முகத்தின் வலப்பக்கம் ரத்தம் வழிய பாதுகாப்பு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படும் புகைப்படம் வெளியானதும், இது அப்பட்டமான நாடகம் என அமெரிக்க மக்களில் ஒருசாரார் பதிவிட்டுள்ளனர்.
அவரது முகத்தில் வழியும் ரத்தம் போலி என்றும் குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, கூகிள் தேடுபொறியில் staged என்ற வார்த்தை உலக அளவில் நான்காவது இடத்திற்கு வந்தது.
முதலிடத்தில் ட்ரம்ப், அடுத்து உளவுத்துறை, தொடர்ந்து Antifa என்ற வார்த்தையும் மக்களால் தேடப்பட்டுள்ளது. இது அனைத்தும் தாக்குதல்தாரி குறித்த தகவல்கள் உத்தியோகப்பூர்வமாக வெளியாகும் சில மணி நேரம் முன்னர் நடந்துள்ளது.
தாக்குதலுக்கு பின்னர் வெளியான புகைப்படங்கள் அனைத்தும், துல்லியம் என்றும், உண்மையில் இது நாடகம் என்பதை எவரும் நம்ப வாய்ப்பில்லை என்றும் சிலர் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ட்ரம்பின் நடவடிக்கை சந்தேகம்
ட்ரம்ப் மீது தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே, இது கட்டமைக்கப்பட்ட நாடகம் என நீங்கள் நம்புகிறீர்களா என சில சமூக ஊடகப் பயனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நடந்த சம்பவம் நாடகமல்ல என நீங்கள் நம்புகிறீர்கள் என்றால், தாக்குதலைத் தொடர்ந்து மேடையில் இருந்து இவ்வளவு விரைவாக அவர்கள் வெளியேறிவிட முடியுமா எனும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன்னொருவர் குறிப்பிடுகையில், திறந்த மேடையில் தாக்குதல் நடத்தப்பட்ட அடுத்த நொடி மனதளவில் சிறிதேனும் நாம் தடுமாறுவோம், ஆனால் ட்ரம்ப் அப்படியான நிலையில் இல்லை என்றும், அவர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறும் பகுதியை அடிக்கடி கவனிப்பதாகவும்,
தாக்குதலுக்கு பின்னர் ட்ரம்பின் நடவடிக்கையும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என பதிவிட்டுள்ளார். திறந்த மேடையில், ஒருவரை கொல்ல வேண்டும் என்றால், கண்டிப்பாக முடியும் என்ற போது, இது அப்பட்டமான நாடகம் என அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் FBI அதிகாரிகள் தரப்பு ட்ரம்ப் மீதான தாக்குதலை கொலை முயற்சி எப்றே அறிவித்துள்ளனர். இதனிடையே, ட்ரம்ப் மீதான தாக்குதல், தேர்தலுக்கு கண்டிப்பாக உதவும் என அவரது ஆதரவாளர்கள் பலர் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
ட்ரம்ப் ஜனாதிபதியாக் தெரிவாகிவிட்டார் என்றே அவரது கட்சியினர் வெளிப்படையாக கூறிவருகின்றனர்.