;
Athirady Tamil News

கனடாவில் புலப்பெயர்ந்தோரை வதைக்கும் வேலையின்மை நெருக்கடி

0

கனடாவில் கடந்த ஒரு தசாப்தமாக புலம்பெயர்ந்தோர் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

கனடாவில் நிரந்தர வதிவிட அந்தஸ்து பெறும் புலம்பெயர்ந்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியர்கள், அந்நாட்டில் தற்போது நிலவும் வேலையின்மை நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில், சிறந்த வாழ்க்கையை எதிர்பார்த்து கனடாவிற்கு குடிபெயர்ந்த இந்தியர்களையும் அங்குள்ள புலம்பெயர்ந்தோரையும் வேலையின்மை கடுமையாக வாட்டிவதைத்து வருகிறது.

Globe and Mail report-இன் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளாக (ஜூன் 2024 வரை) கனடாவில் இருக்கும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் வேலையின்மை விகிதம் 12.6 சதவீதமாக உள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவிலிருந்து குடியேறியவர்களிடையே வேலையின்மை விகிதம் 30 சதவீதத்தை எட்டியுள்ளது.

2023-இல், கனடாவின் 471,810 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களில், இந்தியர்கள் மட்டும் 139,785 பேர். அதாவது கிட்டத்தட்ட 30 சதவீதம் ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.