;
Athirady Tamil News

அமெரிக்காவில் விஷ சிலந்தி கடித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

0

விஷ சிலந்தி கடித்ததால் முகத்தில் தோல்கள் அழுகிய நிலையில் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை (United States) சேர்ந்த ஜெசிகா ரோக் அட்லாண்டா (44) என்ற பெண்ணின் மேல் பழுப்பு நிறத்தில் இருந்த சிலந்திகள் விழுந்துள்ளது.

இதனால் 24 மணி நேரத்திலேயே அவரது முகம், கைகள், தொண்டை ஆகிய இடங்களில் தடிப்பு தடிப்பாக வீங்கியுள்ளது. நேரம் செல்ல செல்ல முகத்தில் உள்ள தோல்கள் அழுகிய நிலையை அடைந்துள்ளது.

சிலந்தி கடி
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த சிலந்தி கடியால் அவருக்கு கை, கால்களில் உணர்வின்மையும், இயக்கம் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஜெசிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “இதனால் எனது முகம் முழுவதும் காயமாகி, தோல்கள் நெருப்பில் பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

விஷத்தன்மை
நான் மிகவும் வேதனை அடைந்தேன். என் கண்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வகையான பழுப்பு வகை சிலந்திகள் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் மட்டுமே காணப்படுகிறது. இந்த இனம் 0. 5 அடி அங்குலம் நீளம் வரை வளரக்கூடியவை.

இது கடித்தால் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நச்சு வாய்ந்தவை. இவை தோல்களை அழுக வைத்தும், புண்களை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.