;
Athirady Tamil News

மிகவும் பிரபலமான நபராக இந்திய பிரதமர் மோடி

0

இந்திய பிரதமர் மோடியை( Narendra Modi) எக்ஸ் வலை தளத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை (10 கோடி) கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலக அளவில் எக்ஸ் தளத்தில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட 7வது பிரபலமாக உள்ளார் இந்திய பிரதமர் மோடி உள்ளார்.

அத்துடன் எக்ஸ்(x) வலை தளத்தை மட்டுமல்லாது, ஏனைய அனைத்து சமூக வலை தளங்களிலும், சில அரசியல் தலைவர்கள் பிரபல்யமாக இருப்பார்கள்.

பிரதமர் மோடி
அந்தவகையில் இந்திய பிரதமர் மோடியை அனைத்து சமூக வலை தளங்களிலும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே, எக்ஸ் வலை தளத்தில் பிரதமரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியன் (10 கோடி) ஆக அதிகரித்து உள்ளது.

இதற்கடுத்ததாகவே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) (38.1 மில்லியன் ), துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது (11.2 மில்லியன் ) மற்றும் போப் பிரான்சிஸ் (18.5 மில்லியன்) ஆகியோர் உள்ளனர்.

முதலிடம்
இந்தியாவிலுள்ள அரசியல் தலைவர்களை அதிகமாக பின்தொடர்பவர்களின் பட்டியலிலும் மோடியே முதலிடத்தில் உள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி க்கு 26.4 மில்லியன் , டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 27.5 மில்லியன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் (19.9 மில்லியன்), மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (7.4 மில்லியன்), ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார் (2.9 மில்லியன்) என அடுத்தடுத்து உள்ளனர்.

அரசியல் வாதிகளை தவிர விராட் கோலி (64.1 மில்லியன்), பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர் (63.6 மில்லியன்), அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (52.9 மில்லியன்) உள்ளிட்டோரும் பிரதமருக்கு அடுத்த நிலையிலேயே உள்ளனர்.

சமூக வலைத்தளம்
எக்ஸ் வலை தளத்தை தவிர்த்து பிரதமரை யூடியூப்பில் 25 மில்லியன் இன்ஸ்டாகிராம் கணக்கில் 91 மில்லியன் பேரும் பின் தொடர்கின்றனர்.

மோடியின், எக்ஸ் வலைத்தளம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 மில்லியன் பின்தொடர்பவர்கள் அதிகரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.