;
Athirady Tamil News

அதிபர் தேர்தலுக்கு எதிரான மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

சிறிலங்கா அதிபர் தேர்தலை (Presidential Election) நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இன்று (15) குறித்த மனு பரிசீலிக்கப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நீதிமன்ற கட்டணமான 5 இலட்சம் ரூபாவுக்கு உட்பட்டே இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

19 ஆவது திருத்தச் சட்டம்
மேலும் நீதிமன்ற கட்டணத்தை ஜூலை 31 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் உரிய முறையில் நிறைவேற்றப்படாததன் காரணமாக, அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தி அங்கீகரிக்கும் வரை அதிபர் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சட்டத்தரணி அருண லக்சிறி உனவடுனவால் (Aruna Laksiri Unawatuna) கடந்த வெள்ளிக்கிழமை (12) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.