;
Athirady Tamil News

பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டிய மௌலவிக்கு விளக்கமறியல்

0

பேருந்தில் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டிய மௌலவிக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி வரை குறித்த மௌலவியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமனறம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது சமூகவலைத்தளங்களில் பரவிவரும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

இதற்கமைய, கண்டி (Kandy) – வத்தேகமவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில் கடந்த 12ஆம் திகதி காலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் சோதனை
இதன்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த மௌலவி ஒருவர் அதே பேருந்தில் முன் இருக்கையில் இருந்த இளம்பெண்ணின் 4 அடி நீளமுள்ள தலைமுடியின் ஒரு அடியை கத்தரிக்கோலால் வெட்டியுள்ளார்.

இதன் பின்னர், கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து இதனை அறிந்த பெண் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, பொலிஸாரால் மௌலவியிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது, ​​அவரிடம் கத்தரிக்கோல் ஒன்று காணப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு
மேலும், குறித்த மௌலவி யுவதியின் தலைமுடியை வெட்டியதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (13) குறித்த மௌலவி, கண்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.