நான் இறந்திருக்க வேண்டும்; பான்டேஜ் உடன் முதல்பேட்டியில் டிரம்ப் கூறியது
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், படுகொலை முயற்சியிலிருந்து உயிர்தப்பியமை குறித்து தெரிவித்த அவர், நான் இறந்திருக்க வேண்டும் நான் இங்கே இருக்ககூடாது என தெரிவித்துள்ளார்.
நியுயோர்க் போஸ்டிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப், தனது முழங்கையில் ஏற்பட்டுள்ள பெரிய காயத்தை செய்தியாளருக்கு காண்பித்தார்.
பான்டேஜ் உடன் டிரம்ப்
அத்துடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தன்னை பாதுகாக்க முயன்றவேளை இந்த காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். வலதுகாதை சுற்றி தளர்வான பெரும் பான்டேஜ் உடன் டிரம்ப் காணப்பட்டார். அவரை படம்பிடிக்க முடியாது என அவரது பணியாளர்கள் தெரிவித்தனர் என நியுயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் மீண்டும் எழுந்து தனது கைமுஷ்டியை உயர்த்தி முகத்தில் இரத்தக்காயத்துடன் போராடுவோம் என தான் கோசமிடுவதை காண்பிக்கும் புகைப்படம்குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப்,
இது தாங்கள் பார்த்ததிலேயே மிகச்சிறந்த புகைப்படம் என தெரிவிக்கின்றார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார். துப்பாக்கி பிரயோகத்தின் பின்னரும் நான் தொடர்ந்து உரையாற்ற விரும்பினேன்.
ஆனால் இரகசிய சேவை பிரிவினர் நான் மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என தெரிவித்தனர் எனவும் டிரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.