ஜோகோவிச்சை வீழ்த்திய அல்கராஸிற்கு விம்பிள்டன் கிண்ணத்தை வழங்கிய கேட் மிடில்டன்
விம்பிள்டன் பட்டத்தை இரண்டாவது ஆண்டாக வென்ற ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸிற்கு இளவரசி கேட் மிடில்டன் வெற்றிக் கிண்ணத்தை வழங்கினார்.
விம்பிள்டன் டென்னிஸ்
புற்றுநோய் சிகிச்சையின்போது பொது அரச கடமைகளில் இருந்து விலகிய இளவரசி கேட் (42), விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் கலந்துகொண்டார்.
இப்போட்டியில் 7 முறை சாம்பியனான செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சை (Novak Djokovic) 6-2, 6-2, 7(7)-6(4) என்ற செட் கணக்கில் கார்லோஸ் அல்கராஸ் (Carlos Alcaraz) வீழ்த்தினார்.
இதன்மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக கார்லோஸ் அல்கராஸ் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
கிண்ணத்தை வழங்கிய கேட்
வெற்றி பெற்ற அல்கராஸிற்கு இளவரசி கேட் விம்பிள்டன் கிண்ணத்தை வழங்கினார். முன்னதாக, கடந்த மாதம் ட்ரூப்பிங் தி கலர் நிகழ்வில் கலந்து கொண்ட கேட், புற்றுநோய் கண்டறியப்பட்டதில் இருந்து இரண்டாவது பொது தோற்றம் இதுவாகும்.
மேலும், அவர் தனது மகள் சார்லோட் (Charlotte) மற்றும் சகோதரி பிப்பா (Pippa) ஆகியோருடன் விம்பிள்டன் டென்னிஸில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.