ஜனாதிபதி பைடன் சொல்வது சரிதான்! டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து ஒபாமா கருத்து
அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என, டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் கூறியது சரிதான் என முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
கொலை முயற்சி
கட்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (Donald Trump) மீது கொலை முயற்சியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக அவரை காதினை குண்டு உரசி சென்றதால் டிரம்ப் உயிர்பிழைத்தார். இச்சம்பவத்திற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அவர், வன்முறை ஒருபோதும் தீர்வாக இருந்ததில்லை. அது காங்கிரஸின் உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, இரு கட்சியினரும் குறிவைக்கப்பட்டு சுடப்பட்டாலும் சரி. டொனால்டு டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்துள்ளது.
இந்த மாதிரியான வன்முறைகளுக்கோ அல்லது எந்த வன்முறைக்கும் அமெரிக்காவில் இடமில்லை. விதிவிலக்குகள் இல்லை. இந்த வன்முறையை சாதாரணமாக அனுமதிக்க முடியாது என்றார்.
பராக் ஒபாமா கருத்து
இந்த நிலையில், ஜோ பைடன் (Joe Biden) கூறியது சரிதான் என முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama) கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”ஜனாதிபதி பைடன் கூறுவது சரிதான். இதுபோன்ற வன்முறைகளுக்கு அமெரிக்காவில் இடமில்லை. ஒருநாடக நாம் எல்லாவற்றிலும் உடன்படாமல் இருக்கலாம், ஆனால் நாம் அதை ஏற்றுக்கொள்ள முடியும்” என கூறியுள்ளார்.
President Biden is right, there is no place in America for this kind of violence. As a country we may not agree on everything, but we should be able to agree on that. https://t.co/sK9Mt7BbMS
— Barack Obama (@BarackObama) July 15, 2024