தமிழர் பகுதியில் ஆசிரியர் ஒருவருக்கு அச்சுறுத்தல்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசுவமடு பகுதியில் உள்ள விசுவமடு மகாவித்தியாலத்தில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸார்
குறித்த அச்சுறுத்தலானது மாணவர்கள் ஊடாக தொலைபேசியில் விடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 08.07.2024 அன்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட ஆசிரியரால் கூறப்பட்டுள்ளது.