நிமல் சிறிபால டி சில்வாவுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அழைப்பாணை
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு (Nimal Siripala De Silva) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
குறித்த அழைப்பாணையானது, மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க இன்று (16) விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்துக்குப் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் நுழைவாயில் பூட்டப்பட்டிருந்தமை தொடர்பில் அதன் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
மாளிகாகந்த நீதவான்
இந்த வழக்கு இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் (Magistrate Court Maligakanda) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்படி, குற்றம் சாட்டப்பட்ட நிமல் சிறிபால டி சில்வாவை ஜூலை 19ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாளிகாகந்த நீதவானால் இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.