;
Athirady Tamil News

15 அடி நீளம், 6614 பவுண்டு எடை! உக்ரைன் மீது ரஷ்யா ராட்சத குண்டு தாக்குதல்

0

உக்ரைனின் ஆயுத கிடங்குகள் மீது ரஷ்யா அதி பயங்கர குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனுக்கு ஆதரவு
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக நேட்டோ வாஷிங்டனில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு பிறகு, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா அதிகரித்து உள்ளது, குறிப்பாக உக்ரைனின் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

பயங்கர ஆயுதம் கொண்டு தாக்குதல்
ரஷ்ய ராணுவம் (VKS or RuAF) சமீபத்தில் உக்ரைனிய ராணுவ தளத்தை குறிவைத்து அவர்களின் மிகப்பெரிய குண்டுகளில் ஒன்றான FAB-3000 குண்டைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, Su-34 குண்டுவீச்சு விமானம் 3 டன் குண்டை ஏற்றுவதையும், பின்னர் போர்க்கால நடவடிக்கையின் போது அதை வீசுவதையும் காட்டும் காட்சிகளை அவர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில், FAB-3000 குண்டு விடுவிக்கப்படுவதையும், அதன் இறக்கை போன்ற துடுப்புகள் விரிவடைந்து தாக்கம் ஏற்படுவதற்கு முன்பு அதை நிலைப்படுத்தும் காட்சிகளும் உள்ளன.

FAB-3000 என்றால் என்ன?
FAB-3000 என்பது ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட அதிக வெடிப்பு திறன் கொண்ட குண்டு (ரஷ்ய மொழியில் FAB என்றால் “உயர் வெடிப்புத் திறன் கொண்ட வான்வழி குண்டு” என்று பொருள்).

இது கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பெரிய ஆயுதம். ஒரு FAB-3000 சுமார் 14.8 அடி நீளமும் 2 அடி அகலமும், சுமார் 6,614 பவுண்டுகள் எடையும் கொண்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.