மன்னர் சார்லசுக்கும் ராணிக்கும் ஆபத்து என வெளியான தகவலால் பரபரப்பு: வெளியான வீடியோ
அமெரிக்க ஜனாதிபதியைக் கொலை செய்ய ஒருவர் முயன்ற விடயம் உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த மன்னர் சார்லசுக்கும் ராணி கமீலாவுக்கும் ஒரு அபாய எச்சரிக்கை செய்தி வந்தது.
பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் சேனல் தீவுகளுக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார்கள்.
நேற்று அவர்கள் ஜெர்சி என்னுமிடத்தில் மக்களுடன் அளவளாவிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு செய்தி வந்தது.
அப்போதுதான் ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கி சுவைக்கத் துவங்கினார் கமீலா. அதற்குள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வந்து அவரது காதில் ஏதோ சொல்ல, உடனடியாக மற்ற அதிகாரிகள் அவரை அங்கிருந்து வேகவேகமாக அழைத்துச் சென்றார்கள்.
அதேபோல, மன்னரையும் பாதுகாவலர்கள் அழைத்துச் செல்ல, இருவரும் அவசர அவசரமாக பக்கத்திலிருந்த ஹொட்டல் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
This is the moment Queen Camilla was ushered out of the Expo here in Jersey (while still holding her ice cream!) amid a security incident that was later deemed a false alarm… pic.twitter.com/50ZPyibuCP
— Matt Wilkinson (@MattSunRoyal) July 15, 2024
நடந்தது என்ன?
ட்ரம்ப் கொலை முயற்சி விடயம் உலகம் முழுவதும் பதற்றத்தை உருவாக்கி உள்ள நிலையில், மன்னருக்கும் ராணிக்கும் ஆபத்து என ரகசிய செய்தி கிடைத்துள்ளது.
ட்ரோன் ஒன்று பறந்ததால் உருவான பதற்றம் அது என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையில், கிடைத்த எச்சரிக்கை செய்தி போலியானது என தெரியவரவே, மன்னரும் ராணியும் மீண்டும் தங்கள் நிகழ்ச்சியைத் தொடர்ந்தார்கள். என்ன நடந்தது என்பது குறித்து பக்கிங்காம் அரண்மனை எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.