பிரித்தானிய பிரபலத்திற்கு 249 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த அவுஸ்திரேலியா! எதற்காக தெரியுமா?
அவுஸ்திரேலியாவில், நாய்களை துன்புறுத்தி கொன்றதற்காக பிரித்தானிய விலங்கியல் நிபுணர் ஆடம் பிரிட்டனுக்கு (Adam Britton) 249 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
52 வயதான ஆடம் முதலைகள் நிபுணர் ஆவார். கடந்த ஆண்டு, விலங்குகளை துன்புறுத்துவது தொடர்பான 60 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
அவுஸ்திரேலிய ஊடகமான ஏபிசியின் அறிக்கையின்படி, ஆடம் ஒரு பிரித்தானிய குடிமகன். இவர் அவுஸ்திரேலியாவின் டார்வினில் உள்ள தனது வீட்டில் நாய்களை சித்திரவதை செய்து வந்தார்.
அந்த நாய்களை பலாத்காரம் செய்த பின், கொலை செய்வது அவரது வழக்கம். மேலும், இதையெல்லாம் அவர் பதிவு செய்து கொண்டிருந்தார்.
நாய்களுடன் உடலுறவு கொள்வதற்காகவே ஆடம் ஒரு ‘சித்திரவதை அறை’யையும் கட்டியிருந்தார்.
Gumtree Australia என்ற இணையதளம் மூலம் ஆடம் 42 நாய்களை வாங்கியிருந்தார். இந்த நாய்களுக்கு புதிய வீடு தருவதாக கூறியிருந்தார்.
இதன் பின்னர் அவர் இந்த நாய்களை ஒரு கப்பல் கொள்கலனில் வைத்திருந்தார். அறிக்கையின்படி, 2020 மற்றும் 2022-க்கு இடையில், ஆடம் 39 நாய்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
நாய்களை துஷ்பிரயோகம் செய்யும் காணொளிகளை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவந்துள்ளார்.
இதற்காக அவர் ‘மான்ஸ்டர்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சுயவிவரத்தைப் பயன்படுத்தினார், இதனால் அவரை யாரும் அடையாளம் காண முடியாது என நினைத்துள்ளார்.
2022-இல், ஆடம் மீது ஒருவர் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, டார்வினில் உள்ள அவரது வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தினர், அங்கு விலங்கு சுரண்டல் தொடர்பான பல ஆதாரங்கள் கிடைத்தன.
ஏப்ரல் 2022-இல் ஆடமை பொலிஸார் கைது செய்தனர். ஜூலை 11 அன்று நீதிமன்ற விசாரணையின் போது, ஆடமின் வழக்கறிஞர் அவரது மன நிலையைக் காரணம் காட்டி குறைவான தண்டனைக்கு முறையிட்டார்.
ஆடம் பிரிட்டன் paraphilia நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதில், பாதிக்கப்பட்டவர் அனுமதியின்றி ஒருவருடன் உடல் உறவில் ஈடுபட முயற்சி செய்வார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் குழந்தைகளைக் குறிவைக்கின்றனர்.
வழக்கறிஞர் அறிக்கையின்படி, கைது செய்யப்பட்ட பின்னர், ஆதாமுக்கு 30 மணிநேர உளவியல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு தான் செய்த குற்றத்திற்காக வருந்தியுள்ளார்.
விலங்கியல் நிபுணர் ஆடம் திருமணமானவர் மற்றும் அவரது மனைவி எரினுக்கு அவரது குற்றங்கள் பற்றி எதுவும் தெரியாது.
BBC, National Geographic சேனல்களில் பணிபுரிந்தவர்…
மேற்கு யார்க்ஷயரில் பிறந்த ஆடம், முதலைகள் குறித்த நிபுணராக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
BBC மற்றும் National Geographic ஆகியவற்றுடன் இணைந்து பல திட்டங்களில் பணியாற்றியுள்ளார். Discovery சேனல் மற்றும் Animal Planet-டின் நிகழ்ச்சிகளிலும் ஆடம் காணப்பட்டார்.
ஆடம் பிரித்தானியாவில் உள்ள குயின் எலிசபெத் கிராமர் பள்ளியில் விலங்கியல் பட்டம் பெற்றார். அதன் பிறகு அவர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புகளை மேற்கொண்டார்.
1996-ஆம் ஆண்டு ஆடம் விலங்கியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். இந்த ஆண்டு அவர் அவுஸ்திரேலியாவுக்கு மாறினார். ஆடம் வனவிலங்கு காப்பாளரும் உயிரியலாளருமான எரினை மணந்தார். இருவரும் சேர்ந்து காட்டு முதலைகள் தொடர்பான ஆலோசனை நிறுவனத்தையும் தொடங்கினர்.