துளசி, மிளகு, தேன் கலந்து சாப்பிட்டால் உடலில் இத்தனை நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க!
துளசி மிளகு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் பல நன்மைகளை தருகின்றது. இந்த நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியம்
நாட்டு வைத்தியம் என்பது தற்போது வரை பெரும்பாலாக காணப்படுகின்றது. குறிப்பாக இதில் துளசி, கருப்பு மிளகு, மற்றும் தேன் ஆகியவை முக்கிய இடம் பிடிக்கின்றது.
இந்த மூலிகைகள் உடலில் சளி இருமலை போக்குவதில் முக்கிய இடம் வகிக்கின்றன. துளசி இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
அடுத்து கருப்பு மிளகில் பைபரின் என்ற கலவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஒரு ஆராய்ச்சியின் மூலம் வெளியிடப்பட்ட உண்மையாகும்.
கருப்பு மிளகை சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறையும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேன் ஒரு இயற்கை இனிப்பு சுவை கொண்டது. தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இது தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆசிய பசிபிக் ஜர்னல் ஆஃப் ட்ராபிகல் பயோமெடிசின் ஆய்வின் கண்டுபிடிப்புகள் தேன் பல்வேறு நோய்க்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று கூறுகின்றன.
தொண்டை புண் மற்றும் இருமல் பிரச்சனை இருப்பவர்களுக்கு தேன் ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்த மூலிகைகளை ஒரு நாளைக்கு வாழ்வில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.