வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு பேரிடி: புதுப்பிக்கப்படும் சட்டங்கள்
புதிய வரிகளை நடமுறைப்படுத்துவதற்கு முன்னர், செலுத்த தவறிய மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
தற்போதைய சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வரி ஏய்ப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கும் தனித்துவமான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்றும், வேறு இடத்தில் வரி செலுத்தியிருந்தால், மீண்டும் வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்துப்பூர்வ அறிவிப்பு
இதேவேளை, வரி செலுத்தியிருந்தால் பிரதேச செயலகத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வரி ஏய்ப்பு செய்பவர்களை பிடிப்பதற்கு வலுவான வலை போடப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள சட்டங்களை தகவல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.