10 லட்சம் ரூபா அபராதம் உறுதி: ஆதங்கத்தை வெளிப்படுத்திய அனுர
ரணில் விக்ரமசிங்க, மீண்டும் ஒருமுறை அதிபரின் பதவிக்காலம் தொடர்பில் விசாரிக்குமாறு யாரையேனும் அனுப்பினால் உறுதியாக 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
கண்டியில் (Kandy) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் சிறிலங்கா அதிபர், அரசியலமைப்பை திருத்த முயற்சித்தாலும் அது எவ்வகையிலும் வெற்றியளிக்காது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குற்றச்சாட்டு
இவ்வாறான முறைகள் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ரணில் தரப்பினர் முயற்சிப்பதாகவும் அனுர குமார குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் குறித்த விசாரிக்குமாறு இரண்டு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.