சார்லஸ் மன்னரின் முதல் நாடாளுமன்ற உரை… லேபர் அரசாங்கத்தின் 5 கொள்கைகள் அறிவிப்பு
சார்லஸ் மன்னரின் முதல் நாடாளுமன்ற உரையினூடாக லேபர் அரசாங்கம் தங்களின் முதன்மையான 5 கொள்கைகளை அறிவித்துள்ளது.
Vapes பயன்பாடு கட்டுப்படுத்தப்படும்
தனியார் பாடசாலைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு VAT விதிக்கப்படுவதுடன், புதிதாக 1.5 மில்லியன் குடியிருப்புகள் கட்டப்படும் என்பது உள்ளிட்ட 5 முதன்மையான கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய லேபர் அரசாங்கமானது பாதுகாப்பு மற்றும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கொள்கையுடன் செயல்படும் என மன்னர் சார்லஸ் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தயாரித்துள்ள உரையை மன்னர் சார்லஸ் வாசித்துள்ளார். அறிவிக்கப்படும் ஒவ்வொரு திட்டங்களும் அதற்கான செலவை ஏற்படுத்தும் என்றே பிரதமர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
லேபர் அரசாங்கம் புகைபிடிப்பதை முற்றிலுமாக தடைசெய்ய உள்ளது. அத்துடன், vapes பயன்பாடும் கட்டுப்படுத்தப்படும். இது தொடர்பில் ரிஷி சுனக் அரசாங்கம் முன்னெடுத்த கொள்கையை ஸ்டார்மர் அரசாங்கமும் கடைபிடிக்க உள்ளது.
அதாவது தற்போது 14 வயது அல்லது அதற்கு குறைவானவர்கள் உத்தியோகப்பூர்வமாக சிகரெட் வாங்குவதை தடை செய்யப்படும். மேலும், இந்த வயது வரம்பு படிப்படியாக அதிகரிக்கப்படும்.
இதனால் 2009க்கு பிறகு பிறந்த எவரும் புகைக்க முடியாத நிலை வரும். அத்துடன் vapes தொடர்பில் விளம்பரம் மற்றும் விற்பனைக்கும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும்.
முதல் 100 நாட்களுக்குள்
இரண்டாவதாக, 1989ல் நடந்த Hillsborough கால்பந்து அரங்க விபத்து தொடர்பில் புதிய சட்டம் இயற்றப்படும். மூன்றாவதாக ஊழியர்களின் உரிமைகள் வலுப்படுத்தப்படும். குறிப்பாக பெற்றோர் விடுப்பு போன்ற உரிமைகளை மக்கள் உடனடியாக அணுக முடியும்.
முன்பு இதற்காக 2 ஆண்டுகள் வரையில் காத்திருக்கும் நிலை இருந்தது. முதல் 100 நாட்களுக்குள் வேலைவாய்ப்பு உரிமைகள் பிரேரணை அறிமுகப்படுத்தப்படும். வேலையை விட்டு நீக்குவதும், புதிதாக ஊழியர்களை பணியமர்த்துதல் போன்ற கொள்கைகள் கைவிடப்படும்.
அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலையில் முதல் நாளிலிருந்தே பெற்றோர் விடுப்பு, நோய்வாய்ப்பட்ட ஊதியம் மற்றும் நியாயமற்ற பணிநீக்கத்திலிருந்து பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
குழந்தை பெற்றுக் கொண்ட ஒரு பெண் வேலைக்குத் திரும்பிய பிறகு ஆறு மாதங்களுக்குப் பிறகு பணிநீக்கம் செய்வது சட்டவிரோதமாகும். நான்காவதாக, ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் பரம்பரை சகாக்கள் சீர்திருத்தம் கொண்டுவரப்படும்.
5வதாக, வாடகைதாரர்களுக்கான பாதுகாப்பு மற்றும் காரணமின்றி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முடிவு ஏற்படுத்தப்படும். வாடகைதாரர்களுக்கு ஆதரவாக கடுமையான புதிய பாதுகாப்பு விதிகளை அறிமுகப்படுத்த இருப்பதாக ஸ்டார்மர் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
இதனால் உரிய காரணமின்றி வாடகைதாரர்களை வெளியேற்ற முடியாது.