நெருக்கடியின் உச்சம்… ஜோ பைடனுக்கு கோவிட் பாதிப்பு: வெள்ளைமாளிகை அறிவிப்பு
ஜனாதிபதிப் போட்டியில் இருந்து விலக, சொந்தக் கட்சியினரே நெருக்கடி அளித்துவரும் நிலையில், ஜோ பைடனுக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளைமாளிகை அறிக்கை
லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாகவும் வெள்ளைமாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பத்திரிகை செயலாளர் தெரிவிக்கையில்,
I'm sick
— Joe Biden (@JoeBiden) July 17, 2024
ஏற்கனவே அவர் மூன்று தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டுள்ளார், அத்துடன், இதற்கு முன்னரும் அவருக்கு இருமுறை கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு குணமடைந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
81 வயதான ஜோ பைடன் முன்னதாக புதன்கிழமை லாஸ் வேகாஸில் உள்ள ஆதரவாளர்களைச் சந்தித்து ஒரு நிகழ்வில் பேசுவதைக் காண முடிந்தது. ஆனால் இரவு நேரப் பிரச்சார உரையை ரத்து செய்தார்.
தேர்தலை விலைக்கு வாங்க
அவரது வயதை குறிப்பிட்டும், டொனால்டு ட்ரம்புடனான நேரலை விவாதத்தில் சொதப்பியதாலும் ஜனாதிபதிப் போட்டியில் இருந்து விலக அவருக்கு எதிரான நெருக்கடி அதிகரித்துவரும் நிலையிலேயே தற்போது கோவிட் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Delaware பகுதியில் அமைந்துள்ள அவரது குடியிருப்பில் ஜோ பைடன் தனிமைப்படுத்திக்கொள்வார் என்றும், ஆனால் அலுவலகப் பணிகளைத் தொடர்வார் என்றே ஜனாதிபதியின் பத்திரிகை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எலோன் மஸ்க் மற்றும் அவரது பெரும் செல்வந்தரான கூட்டாளிகள் சேர்ந்து நடக்கவிருக்கும் தேர்தலை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக ஜோ பைடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.