;
Athirady Tamil News

காசுக்காக கணக்கு சொல்லிக்கொடுத்தவர் பணி இடைநீக்கம்

0

பாடசாலைக்கு சமுகமளிக்காது, உயர்தர வகுப்பு மாணவர் குழுவிற்கு பணத்துக்காக பிரத்தியேக வகுப்பை நடத்தினார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் இடைநீக்கம் செய்துள்ளதாக வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன் தெரிவித்தார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர், அநுராதபுரம் பாடசாலையொன்றில் கற்பிப்பவர் என்பது தெரியவந்துள்ளது.

பெற்றோர்கள் கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு
இந்த ஆசிரியர், பாடசாலை நேரங்களில் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளில் பணத்திற்காக கற்பிப்பதாக பெற்றோர்கள் குழுவொன்று மாகாண கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்திருந்தது.

அவர்களின் முறைப்பாட்டிற்கமைய , மாகாணக் கல்விப் பணிப்பாளர், ஏனைய பணியாளர்கள் குழுவுடன் இணைந்து பாடசாலையை ஆய்வு செய்தனர்.

இதன் போது, ​​ ஆசிரியர் பாடசாலைக்குச் சென்று, ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு, பாடசாலைக்கு வெளியே சென்று பிரத்தியேக வகுப்பில் மாணவர்களுக்கு கற்பித்ததைக் கண்டுபிடித்தனர்.

இவ்வருடத்தில் ஆசிரியர் ஆசிரியர் 26 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளதாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார். தனையடுத்து , குறித்த ஆசிரியரை மாகாண கல்விப் பணிப்பாளர் பணி இடைநிறுத்தம் செய்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.