வெளிநாடொன்றில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: பெரும் நட்டத்தில் வியாபாரிகள்
ஜேர்மனியில் உள்ள (Germany) பல்பொருள் அங்காடிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டை விட பதிவு செய்யப்படாத குற்றங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பு
இதனால் பல்பொருள் அங்காடிகளை நடத்துவோர் பெரும் நட்டத்தை எதிர் கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடிப்படை உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பே இந்த திருட்டு சம்பவங்களுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் ஒரு கும்பல் பொருட்களை இணையத்தளத்தில் விற்று பணம் சம்பாதிப்பதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.