;
Athirady Tamil News

தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைப்பு… போர்க்களமான ஆசிய நாடு: 30 கடந்த பலி எண்ணிக்கை

0

வங்காளதேசத்தில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக குறிப்பிட்டு போராட்டத்தில் குதித்துள்ள மாணவர்கள் தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைத்துள்ளனர்.

இதுவரை 32 பேர்கள் பலி
போராட்டங்களை கைவிட்டு அமைதி திரும்ப வேண்டும் என்று நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா கோரிக்கை விடுத்த அடுத்த நாளில், அரசு தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் நடந்த வன்முறை சம்பவத்திற்கு இதுவரை 32 பேர்கள் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாகவும் அதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் கலவரத் தடுப்பு பொலிசார் ரப்பர் தோட்டாக்களால் துப்பாகிச் சூடும் நடத்தியுள்ளனர். அரசு தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், டசின் கணக்கான வகனங்களையும் தீக்கிரையாக்கியுள்ளனர்.

பலர் தொலைக்காட்சி நிலையத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர்கள் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டில் சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை முயற்சிகளை முடுக்கி விட்டதை அடுத்து, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் கண்டனம் தெரிவிப்பதாக பிரதமர் ஷேக் ஹசீனா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கட்சி பாகுபாடின்றி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது
ஆனால் அமைதி திரும்ப வேண்டும் என்று அவர் முறையிட்ட போதிலும் தெருக்களில் வன்முறை சம்பவங்கள் மோசமடைந்து வருவதாகவே கூறப்படுகிறது. பிரதமர் தங்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள 18 வயது Bidisha Rimjhim தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் தங்கள் சகோதரர்களை படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார். வியாழக்கிழமை மட்டும் குறைந்தது 25 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக அதே வாரத்தில் 7 பேர்கள் கொல்லப்பட்டனர்.

மட்டுமின்றி, காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. தகவல் அறிந்து சம்பவயிடத்தில் குவிக்கப்பட்ட பொலிசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.

இந்த வன்முறையில் 6 மாணவர்கள் மரணமடைந்தனர். பொலிசார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் தப்பினர். நாட்டின் பல பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.