;
Athirady Tamil News

குடிவரவு குடியகல்வு திணைக்களம் முன்பு பதற்ற நிலையால் பொலிஸார் குவிப்பு!

0

இன்று காலை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் மக்கள் குவிந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19) முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி அறிவித்திருந்தது.

இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பம்
அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற அல்லது புதுப்பிக்க www.immigration.gov.lk இணையத்தளத்தின் மூலம் திகதி மற்றும் நேரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இது ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.

இவ்வாறானதொரு பின்னணியில் இன்று காலை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வந்திருந்தனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட திகதி மற்றும் நேரத்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே இன்று வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக நீண்ட வரிசைகளும் நெரிசலும் காணப்பட்டதனால் பொலிஸாருக்கும் கலகத் தடுப்புப் பிரிவினரும் அங்கு அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.