;
Athirady Tamil News

சாவகச்சேரி வைத்தியசாலையில் 17ம் திகதியன்று கடமையில் உத்தியோகஸ்தர்கள் இல்லை!

0

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கடந்த 17ம் திகதியன்று இரவு விசபூச்சியின் கடிக்குள்ளான தனது தந்தையினை சிகிச்சைக்காக கொண்டு சென்ற ஒருவர், அவ்வேளையில் மருத்துவமனையில் மருத்துவர்களோ, தாதியர்களோ இருக்கவில்லை என்றும் யாரும் அங்கு இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டு கொண்டதாக வெளியான செய்தி தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய தரப்புக்களிடம் விளக்கம் கோரியுள்ளது.

1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இற்கு அமைய ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக பதிவுசெய்யப்பட்டு சாவகச்சரி ஆதார வைத்திசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மற்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .

குறித்த விளக்க அறிக்கையை எதிர்வரும் 22 ம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க பணிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.