மூன்றாம் நிலைக்கல்வியை உயர்த்துதல் நிகழ்ச்சித் திட்டத்தை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!
கிளிநொச்சி இயக்கச்சி மகா வித்தியாலயத்தில் க.பொ.த உ/த 2024(2023) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு “மூன்றாம் நிலைக்கல்வியை உயர்த்துதல்” பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது நேற்று(18) நடைபெற்றது.
கல்வி அமைச்சின் திறன்கள் அபிவிருத்தி பிரிவினால் தொழில் வழிகாட்டல் மூலம் “மூன்றாம் நிலைக்கல்வியை உயர்த்துதல்” பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் நடாத்தப்பட்டது.
March 05 தொடக்கம் May 05 வரையான காலப்பகுதியில் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் நடாத்தப்பட்டது.
இதில் இணைந்து பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கே இவ்வாறு சான்றிதழ்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.
கிளி/இயக்கச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் இ.த ஜெயசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இப்பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தில் தொழில் வழிகாட்டல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், ஆங்கிலம் ஆகிய கற்கைநெறிகள் நடாத்தப்பட்டன.