;
Athirady Tamil News

யாழில். “yarl Royal Palace “க்கு அடிக்கல் நாட்டு

0

Tilko blue ocean நிறுவனத்தின் “yarl Royal Palace “ சொகுசு வீட்டு தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கண்டி வீதியில், பழைய பூங்காவிற்கு முன்பாக குறித்த சொகுசு மாடி அமையப்பெறவுள்ளது.

அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் , யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் . மருத்துவபீட பீடாதிபதி , கலைப்பீட பீடாதிபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

குறித்த சொகுசுமாடி வீட்டு தொகுதியானது புதிய பரிமாண வளர்ச்சி தொழிநுட்பங்களை கொண்டு அமைக்கவுள்ளோம். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யாழ்ப்பாணத்தில் தமது முதலீடுகளை மேற்கொள்ள முடியும் என்பதனை எமது முயற்சி ஊடாக வெளிப்படுத்தவுள்ளோம்.

எமது இந்த முயற்சி ஊடாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யாழ்ப்பாணத்தை நாடி வருவார்கள் என நம்புகிறோம். யாழ்ப்பாணத்தை பெரிய சிங்கப்பூர் ஆக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.

நாம் இந்த துறையில் நீண்ட கால அனுபவங்களை கொண்டவர்கள். எமது அனுபவங்கள் அறிவினை கொண்டு யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமாக புதிய தொழிநுட்பங்களை உட்புகுத்தி இந்த சொகுசு மாடியை நிர்மாணிக்க உள்ளோம் என blue ocean நிறுவனத்தின் சிவராஜா துமிலன் மற்றும் Tilko City Hotel உரிமையாளர் திலக் திலகராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.