சிலி நாட்டை உலுக்கியுள்ள பயங்கர நிலநடுக்கம்
தென் அமெரிக்காவிலுள்ள நாடான சிலியில் நேற்று பயங்கர நிலநடுக்கதொன்று பதிவாகியுள்ளது.
சிலி(Chile) நாட்டிலுள்ள கடற்கரை நகரான அண்டோபகஸ்டாவிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் 126 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 7.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
பயங்கர நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கத்தால் பாரிய கட்டடங்கள் அதிர்ந்துள்ளன. எனினும், உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை, இந்த ஆண்டு ஜனவரியில், 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 118 கிமீ ஆழத்தில் வடக்கு சிலியின் தாராபாகாவில் தாக்கியுள்ளது.
இதற்கு முன்னர் சிலியில் கடந்த 2010ம் ஆண்டு 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 526 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.