;
Athirady Tamil News

சில நிமிடங்களில் அமைதியான மரணம்! சுவிட்சர்லாந்தில் தற்கொலை சாதனம் அறிமுகம்

0

சுவிட்சர்லாந்தில் சுயமாக இயக்கக்கூடிய Portable Suicide Pod தற்கொலை சாதனம் ஒன்றை முதன் முதலில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

“லாஸ்ட் ரிசார்ட்” (Last Resort) என்ற உதவி தற்கொலை ஆதரவு அமைப்பு இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

Sarco Pod: அமைதியான மரணம்
“சார்கோ” (Sarco) என்ற இந்த சாதனம் 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எதிர்காலத்தை ஒத்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இது சாதனத்திற்குள் இருக்கும் காற்றுடன் கலந்திருக்கும் ஆக்சிஜனை நைட்ரஜன் வாயு கொண்டு மாற்றும், இதன் மூலம் உடலில் ஆக்சிஜன் கிடைப்பது தடைபட்டு அமைதியான முறையில் மரணம் ஏற்படும். இதனை பயன்படுத்துவதற்கான செலவு மிகக் குறைவு($20) என தகவல் தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு உதவி செய்வது சட்டப்பூர்வமானது என்றும், இறுதி நடவடிக்கையை நபர் தானே மேற்கொள்ள வேண்டும் என்றும் “லாஸ்ட் ரிசார்ட்” அமைப்பு கருதுகிறது.

“சார்கோ” சாதனத்தில் ஆர்வம் காட்டுபவர்கள் பலர் உள்ளனர். எனவே இது விரைவில் நடைபெற அதிக வாய்ப்புள்ளது” என்று “லாஸ்ட் ரிசார்ட்” அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஃப்ளோரியன் வில்லட் (Florian Willet) கருத்து தெரிவித்துள்ளார்.

சாதனம் எப்படி வேலை செய்கிறது?
சார்கோ சாதனத்தில் நுழைவதற்கு முன்பு, பயன்படுத்துபவரின் மனநிலை தகுதியை உறுதிப்படுத்த மனநல மதிப்பீடு கட்டாயமாகும்.

ஒப்புதல் கிடைத்ததும், நபர் சாதனத்திற்குள் சென்று தங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்தும் தானியங்கி கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

இறுதியாக, செயல்முறையைத் தொடங்க ஒரு பொத்தானை அழுத்தும்படி குரல் ஒன்று அறிவுறுத்தும்.

அவர்கள், பொத்தானை அழுத்தும்போது ஆக்சிஜன் அளவு விரைவாகக் குறைந்து, சில நிமிடங்களில் மயக்கம் ஏற்படுவதற்கு முன்பு திசை மாற்றமடைந்த மற்றும் மகிழ்ச்சியான நிலை ஏற்படும் என்று சார்கோ சாதனத்தை உருவாக்கிய பிலிப் நிட்ச்கே (Philip Nitschke) விளக்குகிறார்.

பொத்தானை அழுத்திய பின்னர் இந்த செயல்பாட்டை நிறுத்த முடியாது என்றும் நிட்ச்கே வலியுறுத்துகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.